ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.;
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் அ.தி.மு.க. நகர கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகரச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். அவை தலைவர் அரிச்சந்திரன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அருண், மாணவரணி செயலாளர் கணேச பெருமாள், மகளிர் அணி செயலாளர் இமாக்குலேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் துணைச் செயலாளர் மரிய சாந்தா ரோஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர்கள் மீனாட்சி சுந்தரம், சுப்பையா பாண்டியன், நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கைக்கண்டார், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, ேசரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரி செல்வம், நகரச் செயலாளர்கள் அம்பை அறிவழகன், சேரன்மாதேவி பழனிக்குமார், கல்லிடைக்குறிச்சி முத்துகிருஷ்ணன், அம்பை ஒன்றிய துணைச்செயலாளர் பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.