பெண்ணிடம் நகை பறிப்பு

ராமநாதபுரம் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.;

Update:2023-06-20 00:15 IST

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் வடக்குபுதுத்தெரு பெரிய கருப்பன் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி வித்யா (வயது 33). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு சடங்கு விசேஷத்திற்கு செல்வதற்காக அரண்மனை பகுதியில் பழைய சந்தோஷ் தியேட்டர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் வித்யா கழுத்தில் இருந்த 6¾ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த வித்யா இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்