நடைபயிற்சி சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
முகவரி கேட்பது போல் நடித்து நடைபயிற்சி சென்ற ஆசிரியையிடம் நகை பறித்துவிட்டு தப்பிய வாலிபரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
பொள்ளாச்சி
முகவரி கேட்பது போல் நடித்து நடைபயிற்சி சென்ற ஆசிரியையிடம் நகை பறித்துவிட்டு தப்பிய வாலிபரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரிைய
பொள்ளாச்சி ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வசந்தா (வயது 49). செம்பாகவுண்டர் காலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வசந்தா நேற்று முன்தினம் காலையில் ஜோதி நகர் 100 அடி ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், ஆசிரியை வசந்தாவிடம் பேச்சு கொடுத்தார்.
தொடர்ந்து தமிழ்ச்செல்வன் என்பவரது வீடு எங்குள்ளது என்று விசாரித்தார். அதற்கு அவர் எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு நடைபயிற்சியை தொடர்ந்தார்.
வலைவீச்சு
உடனே அந்த வாலிபர், வசந்தாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை வசந்தாவிடம் நகையை பறித்துவிட்டு தப்பி சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.