ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூரில் பங்குதாரரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2023-02-16 14:34 GMT

திருப்பூரில் பங்குதாரரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரியல் எஸ்டேட் புரோக்கர்

திருப்பூர் சாமுண்டிபுரம் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 57). இவரும், திருப்பூர் அங்கேரிப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையாவும் (57) சேர்ந்து ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்தனர். இருவரும் பங்குதாரர்களாக இருந்து பணத்தை போட்டு நிலத்தை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக்கொள்வது வழக்கம்.

இருவரும் சரிபாதி பணம் போட்டு நில விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருப்பையா, சந்திரசேகருக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் சந்திரசேகர் அவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மறுத்து வந்துள்ளார்.

7 ஆண்டு சிறை

இந்தநிலையில் கடந்த 19-2-2009 அன்று சந்திரசேகர், அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள கருப்பையா அலுவலகத்துக்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். மேலும் பணத்தை கொடுக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் கருப்பையா பணம் கொடுக்காததால் அங்கேயே தீக்குளித்தார். படுகாயத்துடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சந்திரசேகரை தற்கொலைக்கு தூண்டியதற்காக கருப்பையாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்