காலபைரவர் கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு யாகம்

தூத்துக்குடி அருகே காலபைரவர் கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு யாகம் நடைபெற்றது.

Update: 2022-09-25 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பில் மகா பிரத்தியங்கிரா தேவி, கால பைரவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமம் நடந்தது. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மகா யாகம் நடந்தது. மதியம் 12.30 மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், சந்தனம், திருநீறு, மஞ்சள், குங்குமம், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகமும், மதியம் 1.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்