கம்பம் நகராட்சி கூட்டம்

கம்பம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2023-09-11 18:45 GMT

கம்பம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கம்பம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு நிழற்குடை அமைத்து அதில் நினைவு கட்டிடம் கட்டுவது, கம்பம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் சுமார் 879 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் சாதிக் பேசும்போது, முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறை, பழைய கழிவுநீா் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று கவுன்சிலர் வலியுறுத்தினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் பதில் அளித்தார். இதில், பொறியாளர் அய்யனார், சுகாதார அலுவலர் அரசக்குமார், மேலாளர் நல்லதம்பி, வருவாய் ஆய்வாளர் ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்