விசிக தலைவர் திருமாவளவனுக்கு கனிமொழி எம்.பி. பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு கனிமொழி எம்.பி. பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.;

Update:2023-08-17 09:39 IST

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று தனது 61 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருமாவளவனுக்கு திமுக எம்.பி.கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது,

"சனாதனத்திற்கு எதிரான சமூகநீதிப் போரில் தொடர்ந்து பங்காற்றி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சக நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்