உத்தரபிரதேச சாமியார் மீது கறம்பக்குடி போலீசில் புகார்

உத்தரபிரதேச சாமியார் மீது கறம்பக்குடி போலீசில் புகார் அளித்தார்.;

Update:2023-09-07 00:31 IST

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பரமஹம்ச சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்து கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், தி.மு.க.வினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கறம்பக்குடி ஒன்றியம், சொக்கம்பேட்டை தி.மு.க. கிளை செயலாளர் இளங்கோவன் கறம்பக்குடி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் வன்முறையை தூண்டும் வகையிலும், அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பேசிய உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்