கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் விஷம் குடித்து தற்கொலைகுடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2023-09-25 21:36 GMT

குடும்ப பிரச்சினை காரணமாக கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேரூராட்சி துணைத்தலைவர்

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்து கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியின் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சக்திகுமார் (வயது 40) இருந்தார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு சஞ்சய் (14) என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக சக்திகுமார் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதன்காரணமாக சக்திகுமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திகுமார் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்