கருணாநிதி பிறந்தநாள் விழா; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

பணகுடியில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவில், சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்றார்.;

Update:2022-06-04 02:09 IST

பணகுடி:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சபாநாயகர் அப்பாவு தனது சொந்த ஊரான பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார். தொடர்ந்து லெப்பைகுடியிருப்பில் ரூ.66 லட்சத்தில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் சாந்தி, பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் கவுன்சிலர் தம்பிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்