கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-01-17 18:30 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதேேபால் தோகைமலையில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்