கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம்; 30-ந் தேதி நடக்கிறது

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 30-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.;

Update:2022-10-23 22:44 IST

கடத்தூர்

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 30-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

கந்த சஷ்டி விழா

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் கந்த சஷ்டி விழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 7.30 மணி அளவில் சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும், காலை 10 மணிக்கு சஷ்டி விரதம் காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணி அளவில் சண்முகர் அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஹோமம் மற்றும் அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் தங்கமயில், தங்கரத புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 30-ந் தேதி காலை 6 மணிக்கு ஹோமம், அபிஷேக ஆராதனை, நடைபெற உள்ளது.

சூரசம்ஹாரம்

காலை 9 மணிக்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி மதியம் 12 மணி அளவில் நடக்கிறது. அதன்பின்னர் முருகப்பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு சண்முகர் அர்ச்சனை நடைபெற உள்ளது.

இரவு 7 மணி அளவில் தங்கமயில், தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. 31-ந் தேதி காலை 9 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு மதியம் 12 மணி அளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்