சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டு
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில், அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம் சார்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டில் வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் மனித-யானை மோதலில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை இயக்குனர் பார்கவ தேஜா தலைமை தாங்கி, பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் வன உயிரின கணக்கெடுப்பு பணியில் சிறப்பாக பதிவு மேற்கொண்ட பணியாளர்களுக்கும், நல்ல முறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதனை பதிவு செய்த பணியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள் புகழேந்தி, மணிகண்டன், சுந்தரவேல், வெங்கடேஷ், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.