கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நடத்தப்பட்டது.;

Update:2022-08-09 00:00 IST

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்வி துறையால் நடைபெற உள்ள பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் கபடி போட்டிக்கும் சிறப்பாக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஒக்கூரில் 55 கிலோ எடை பிரிவினருக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் அரசு பள்ளி கபடி அணியினர் கலந்து கொண்டு நான்காம் இடம் பெற்று ரூ.5 ஆயிரமும், வெற்றி கோப்பையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்தனர். பயிற்சி அளித்த தமிழாசிரியர் குமார், பொருளியல் ஆசிரியர் சுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்