குமரிக்கு 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது

ஆந்திராவில் இருந்து குமரிக்கு 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது

Update: 2023-01-14 18:45 GMT

நாகர்கோவில், 

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாநில அரசு ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 1,300 டன் ரேஷன் புழுங்கல் அரிசி ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.

நேற்று காலை முதல் சரக்கு ரெயில் வேகன்களில் இருந்த அரிசி மூடைகள் லாரிகள் மூலம் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. குடோன்களில் இருந்து அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மூடைகள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்