அழகிய சொக்கநாதர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பழனி அருகே அழகிய சொக்கநாதர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-05-11 19:00 GMT

பழனியை அடுத்த கீரனூரில் அழகிய சொக்கநாதர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு கோவில் விமானம், சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மங்கல இசை, திருவிளக்கு ஏற்றுதல், காப்பு அணிவித்தல், திருக்குடங்கள் உலா, முதற்கால யாகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலையில் புனிதநீர் வழிபாடு, கோபுர கலச வழிபாடு, கண் திறத்தல், தீபாராதனை, திருக்குடங்கள் உலா நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்