குறுவை சாகுபடி நெல் கொள்முதல் நிலையம்

குறுவை சாகுபடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2023-07-14 18:45 GMT

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பயிரிடப்படும் குறுவை நெல் சாகுபடியை கொள்முதல் செய்வதற்காக, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று திருப்புவனம் யூனியனை சேர்ந்த ஏனாதி-தேளி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வளாகத்தில் நெல் கொள்முதல் நிலைய மிஷினை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் இயக்கி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நுகர்பொருள் வாணிப கழக சிவகங்கை மண்டல மேலாளர் அருண்பிரசாத், கிடங்கு கண்காணிப்பாளர் பெரியசாமி, கொள்முதல் அலுவலர் கலைச்செல்வன், அயன்ராஜ், திருப்புவனம் யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, ஏனாதி-தேளி ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம், துணை தலைவர் அழகுப்பிள்ளை குணசேகரன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மடப்புரம் மகேந்திரன், காளீஸ்வரன், சேகர், திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், பத்மாவதி முத்துக்குமார், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்