கே.வி.குப்பம் ஒன்றியக் குழு கூட்டம்

கே.வி.குப்பம் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.;

Update:2022-11-02 22:52 IST

கே.வி.குப்பம் ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இ.கோபி, த.கல்பனா, மாவட்ட கவுன்சிலர்கள் அசோக்குமார், கவிதா, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு தீர்மான நகலை வாசித்தார்.

உறுப்பினர்கள் கே.சீதாராமன், ஜெயா, ராஜா, வேங்கையன், திவ்யா, சரளா, தாமோதரன், தாமோரவி, சுந்தரி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், திருமணியில் மருத்துவ வசதி, ரேஷன் கடை கட்டிடம் பழுது நீக்குதல், அன்னங்குடியில் அங்கன்வாடி கட்டிடம் சீரமைத்தல், லத்தேரி சந்தைமேட்டில் குப்பைகளை அகற்றுதல், கொரோனா கால பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்குதல் குறித்து வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த தலைவர் 15-வது நிதிக் குழு மானியத்தில் அங்கன்வாடி கட்டிடங்கள் பழுது நீக்கப்படும். குப்பைகளில் இருந்து பிரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை துண்டுகளாக நறுக்கி தாருடன் கலந்து ரோடு போட ஏற்ற வகையில் செய்வதற்கான எந்திரம் வாங்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்