உலக தண்ணீர் தினத்தையொட்டிநாமக்கல் ஜெட்டிகுளத்தில் தூய்மை பணி

Update:2023-03-23 00:30 IST

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின் பேரில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கோட்டை சாலையில் உள்ள ஜெட்டி குளத்தில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்கள் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்ட வேண்டாம் என அறிவிப்பு பதாகையும் அங்கு வைக்கப்பட்டது.

இதேபோல் சேலம் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி தலைவர் கலாநிதி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதை தொடர்ந்து அங்கு 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்