ஆரணியில் மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-23 10:36 GMT

ஆரணி

ஆரணியில் மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வக்கீல்கள், சங்க துணை தலைவர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு சட்ட ஆணையத்தின் இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியியல் சட்டம், குற்ற நடைமுறை தண்டனை சட்டம் ஆகியவற்றை இந்தி, சமஸ்கிருதத்தில் மொழி பெயர் மாற்றம் செய்வதை எதிர்த்தும் ஆங்கிலத்திலேயே சட்ட பெயர் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்க முன்னாள் தலைவர் ஏ. சிகாமணி, முன்னாள் அரசு வக்கீல்கள் சரவணன், கைலாஷ், மூத்த வக்கீல்கள் திருஞானம், செந்தில், மனோகரன், பார்த்தீபன், நிர்மலா, பாபு உள்பட வக்கீல்கள் பலரும் கலந்து கொண்டனர்.========

Tags:    

மேலும் செய்திகள்