வடமாநில தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு
பந்தலூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
பந்தலூர்
பந்தலூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், வடமாநில தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் பந்தலூரில நடைபெற்றது. முகாமுக்கு வக்கீல் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முகாமில் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகளை எப்படி பெறுவது, குழந்தைகளை படிக்க வைப்பது, தொழிலாளர் நல சட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வக்கீல்கள், வடமாநில தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.