வனவிலங்குடன் ஏற்பட்ட மோதலில் சிறுத்தை உயிரிழப்பு

நவக்கரை வனப்பகுதியில் வனவிலங்குடன் ஏற்பட்ட மோதலில் சிறுத்தை உயிரிழந்தது.;

Update:2023-07-18 04:30 IST

நவக்கரை


நவக்கரை வனப்பகுதியில் வனவிலங்குடன் ஏற்பட்ட மோதலில் சிறுத்தை உயிரிழந்தது.


சிறுத்தை உயிரிழப்பு


கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.


இந்த நிலையில் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட நவக்கரை அருகே உள்ள அட்டமலை பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் ஒரு சிறுத்தை பிணமாக கிடந்தது. அதன் உடலில் காயங்களும் இருந்தன.


1½ வயது பெண் சிறுத்தை


உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரக அதிகாரி சந்தியா, வன கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனர்.


அப்போது அது 1½ வயதான பெண் சிறுத்தை என்பதும், மற்றொரு வனவிலங்குடன் ஏற்பட்ட மோதலில் அது உயிரிழந்ததும் தெரியவந்தது. பின்னர் மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் அந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.


வனத்துறையினர் விசாரணை


இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, உயிரிழந்த சிறுத்தை மற்றொரு வனவிலங்குடன் ஏற்பட்ட மோதலில்தான் உயிரிழந்து இருக்கிறது. அது எந்த வனவிலங்கு என்பது தெரியவில்லை. சிறுத்தை உயிரிழந்த இடத்தின் அருகே இருக்கும் கால்தடத்தை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்