ஆழியாறில் சிறுத்தை நடமாட்டம்

ஆழியாறில் சிறுத்தை நடமாட்டம்;

Update:2022-08-08 21:58 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாறு புளியங்கண்டியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கடந்த மாதம் மர்ம விலங்கு கடித்து கொன்றது. பின்னர் கேமரா பொருத்தி கண்காணித்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த பகுதிக்கு சிறுத்தை வரவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு அதே தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு நாயை கடித்து கொன்றது. பின்னர் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தோட்டத்தை சுற்றி தென்னை மரங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆழியாறில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் பீதி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்