திருவள்ளூர்: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு - மீனவர் காயம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ஒரு பைபர் படகு தீப்பற்றி எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடலில் குதித்தனர். இதையடுத்து, கடலில் குதித்த மீனவர்களை மற்றொரு படகில் வந்த சக மீனவர்கள் மீட்டனர். அப்போது, பைபர் படகில் பற்றிய தீயை அணைக்க முயன்ற ஜெகன் என்ற மீனவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெகனை மீட்ட மீனவர்கள் அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.