சாராயம் விற்றவர் கைது
புதுப்பாலப்பட்டு பகுதியில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பூபதி(வயது 53) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுபற்றிய தகவல்அறிந்து சென்ற போலீசார் பூபதியை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.