மது விற்றவர் கைது

குலசேகரம் அருகே மது விற்றவர் கைது

Update: 2023-06-25 18:45 GMT

குலசேகரம், 

குலசேகரம் அருகே உள்ள கல்லடிமாமூடு பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த பகுதியில் மது மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராஜேஷ் (வயது40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் மற்றும் 9 கட்டு புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்