கறவை மாடுவாங்க விவசாயிகளுக்கு கடன் உதவி

திருப்பத்தூர் அருகே கறவை மாடு வாங்க விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.;

Update:2023-10-27 00:15 IST

கந்திலி ஒன்றியம், குரும்பேரி ஊராட்சியில் விவசாயிகளுக்கு இலவச பால் கேன் மற்றும் கறவை மாடு வாங்க கடன் உதவி, பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குரும்பேரி பால் உற்பத்தியாளர்ள் சங்க தலைவர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். ஆவின் பொது மேலாளர் இளங்கோ வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கடன் உதவி வழங்கினர்.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வளர்ப்பு குறித்து விளக்கப்பட்டது. இதில் பேராம்பட்டு கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.குலோத்துங்கன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஏ.ராஜா, இயக்குனர்கள் தெய்வசிகாமணி, தசரதன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்