மாற்றுத்திறனாளிகளுக்கு இ-சேவை மையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு இ-சேவை மையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2023-06-22 19:06 GMT

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் செய்து முன்னேற மானியத்துடன் மத்திய கூட்டுறவு வங்கி கடன், ஆவின் பால் நிலையம் அமைக்க நிதி உதவி, இலவச தையல் எந்திரம் போன்றவை வழங்கி வருகிறது. தற்போது ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கு இ-சேவை மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராம தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து உரிமம் வழங்கப்பட உள்ளது. அதற்காக tnesevai.tn.gov.in மற்றும் tnega.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையம் அமைக்க விருப்பமுள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பிற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்