பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே அந்தரத்தில் தொங்கிய லாரி

Update:2023-04-01 00:15 IST

பரமத்திவேலூர்:

பெங்களூருவில் இருந்து பெரிய வெங்காயத்தை ஏற்றி கொண்டு தூத்துக்குடிக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை தர்மபுரியை சேர்ந்த பெரியண்ணன் என்பவர் ஓட்டி சென்றார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே சென்றபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறக ஓடிய லாரி சாலையோரமாக உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ இருந்தது. அப்போது டிரைவர் பெரியண்ணன் சாதுர்த்தியமாக செயல்பட்டு லாரியை நிறுத்தினார். இதனால் பள்ளத்தில் கவிழாமல் லாரி அந்தரத்தில் தொங்கியது. இதன் காரணமாக டிரைவர் பெரியண்ணன் காயங்களின்றி தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனர். முன்னதாக லாரியில் இருந்த பெரிய வெங்காய மூட்டைகள் மற்றொரு லாரியில் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்