தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-18 17:30 GMT
சிவகங்கையை அருகே மேலவாணியங்குடி பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்று மாலையில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று தாழ்வாக பறந்தபடி சென்றது. மீண்டும் சிறிது நேரத்தில் அந்த விமானம் அவ்வழியாக தாழ்வாக பறந்து சென்றது. தொடர்ந்து 3 முறை இதே போல விமானம் தாழ்வாக பறந்தது. பின்னர் மதுரை நோக்கி பறந்து சென்றது. இதை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.





Tags:    

மேலும் செய்திகள்