மாகாளியம்மன் கோவிலுக்குமுளைப்பாரி ஊர்வலம்

Update:2023-08-18 22:43 IST


திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த பொம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து சிறப்பு பூஜையுடன் புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தலையில் ஏந்தியபடி மாகாளியம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணி முதல் கும்ப அலங்காரம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, அக்னிகார்யம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் இரவு 8 மணிக்கு திருப்பூர் அழகு வள்ளி கும்மியாட்ட குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்வதாகவும், தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

மேலும் செய்திகள்