பயணியர் நிழற்குடையில் ஆண் பிணம்

பயணியர் நிழற்குடையில் ஆண் பிணமாக கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2023-02-03 18:45 GMT

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே சென்னை பஸ்கள் வந்து செல்லும் பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்