ஆண் பிணம் மீட்பு

தேனி பஸ்நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

Update: 2023-01-31 19:00 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் சாலையோரம் ஆண் பிணம் கிடப்பதாக தேனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்