வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-22 01:06 IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மகன் பூபதி (வயது 21). இவர் நேற்று முன்தினம் வேலை காரணமாக நெல்லை வந்தார். நெல்லை புதிய பஸ்நிலையம் பகுதியில் நின்றுகொண்டு இருந்த போது அங்கு வந்த மர்மநபர் பூபதியிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்து பூபதி, மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வள்ளியூர் கலந்தபனை பகுதியை சேர்ந்த அகஸ்டீன் மகன் ஜெபமணி ஆண்ட்ரூஸ் (28) என்பவர் செல்போனை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்