பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

கத்திகுத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-06 13:47 GMT

சென்னை ,

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண்மணி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இரவில் ரெயிலுக்காக காத்திருந்த தமிழ்ச்செல்வியை அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் படுகாயம் அடைந்த தமிழ்செல்வி தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் . இது தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சுப்பிரமணியன் என்பவரை தாம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கத்திகுத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்