மின் ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவர் கைது

ஆலங்குளத்தில் மின் ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-12 00:15 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி ஆலங்குளம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, ரூ.2 லட்சம் பணத்தைப் பெற்றார். பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு சக ஊழியர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரிய வந்ததது. இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்திநகர் கிருஷ்ணன் மகன் ராஜா என்ற குமார் (34) என்பவர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருச்சிக்கு சென்று ராஜாவை கைது செய்து ரூ.2 லட்சத்தை மீட்டனர். பின்னர் அவரை ஆலங்குளம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்