சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார். Man who smuggled ration rice in cargo auto arrested

Update: 2023-08-11 18:32 GMT

குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் காந்திகிராமம் தொழிற்பேட்டை 4 வழி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 8 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் அந்த சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக சரக்கு ஆட்டோ டிரைவர் நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்