தியாகதுருகம் செல்வ விநாயகர் கோவிலில்சிவன், நந்தீஸ்வரருக்கு மண்டல பூஜை
தியாகதுருகம் செல்வ விநாயகர் கோவிலில் சிவன், நந்தீஸ்வரருக்கு மண்டல பூஜை நடைபெற்றது.;
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் அருகே சிவன் மற்றும் நந்தீஸ்வரர் சாமி சிலைகள் அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செல்வ விநாயகர் மற்றும் சிவன், நந்தீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு தினமும் பூஜை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சிவன், நந்தீஸ்வரருக்கு 48-வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி சாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் தியாகதுருகம் நகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.