மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு

மேலப்பாளையத்தில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.;

Update:2023-02-15 03:31 IST

மண்ணுளி பாம்புகள் மணற்பாங்கான இடங்களில் வாழக்கூடியதாகும். இத்தகைய பாம்புகள், விவசாய நிலங்களில் உரம் பயன்பாடு அதிகரித்த இந்த காலகட்டத்தில், விவசாய நிலங்கள் கட்டிடங்களாக மாறிய சூழலில் இடப்பெயர்வு செய்து குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் வர தொடங்கியுள்ளது. இவ்வகை பாம்புகள் மருத்துவ குணம் உடையது என பரப்பப்பட்டு பல லட்ச ரூபாய்களுக்கு விற்கப்பட்டும் வருகின்றது.

இந்தநிலையில் மேலப்பாளையம் கருங்குளம் குடியிருப்பு பகுதியில் மண்ணுளி பாம்பு கிடந்தது. இதை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், சுலைமான், நயினார், ரமேஷ் ஆகியோர் மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அவர்களை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்