படவேடு கமண்டல நதி மீது மேம்பாலம் அமைக்க அளவீடு செய்யும் பணி

படவேடு கமண்டல நதி மீது மேம்பாலம் கட்டுவதற்கு அளவிடும் பணியுடன் கட்டுமான பணிகள் ெதாடங்கின.;

Update:2022-12-05 22:56 IST

கண்ணமங்கலம்

படவேடு கமண்டல நதி மீது மேம்பாலம் கட்டுவதற்கு அளவிடும் பணியுடன் கட்டுமான பணிகள் ெதாடங்கின.

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சி முருகர் கோவில் மலையடிவாரத்தில் கமண்டல நதி மீது அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்தது. இந்த வழியாக காளிகாபுரம், லிங்காபுரம், தேவனாங்குளம் உள்பட பல்வேறு கிராம மக்கள், மாணவ-மாணவிகள் படவேடுக்கு வந்து சென்றனர்.

தரைப்பாலம் சேதமடைந்த காரணத்தால் அவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர மிகவும் சிரமப்பட்டனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு நபார்டு நிதியில் ரூ.2 கோடியே 62 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என அப்போதைய எம்.எல்.ஏ.கூறினார்.

ஆனால் பாலம் கட்டும் பணி தொடங்கப்படாததால் கிராம மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக தற்போது அளவீடு செய்து பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஒரு வருடத்திற்குள் பணிகள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்