விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.;

Update:2023-03-20 16:47 IST

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 17,18-ந் தேதிகளில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

முதல் நாளன்று 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, பேட்மிண்டன், கோ-கோ, டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடந்தது. தொடர்ந்து 2-வது நாளில் கால்பந்து, நீச்சல், கபடி, யோகா, ஆக்கி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிபடுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் முருகேஷ் வழங்கி பாராட்டினார். இதில் 162 பேருக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்