மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2023-01-31 18:45 GMT

எஸ்.புதூர்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, பத்மநாபன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் எஸ்.புதூர் வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுமார் 160 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் பொது மருத்துவம், தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், உதவித்தொகைக்கான பதிவு, மனநல, எலும்பு மூட்டு, காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளை வழங்கினர். மேலும் இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு மற்றும் போக்குவரத்து பயணப்படி வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்