மருத்துவ காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

மருத்துவ காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-12-22 19:39 GMT


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத்தொகை மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அரசு ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற 29-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்