கிருஷ்ணகிரியில்சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம்

Update: 2023-07-21 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களைச் சார்ந்த நீதிபதிகள், மத்தியஸ்தர்கள் மற்றும் வக்கீல்களுக்கு, சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமை தாங்கி சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த பயிற்சியாளர், மத்தியஸ்தர் கீதாராமசேஷன், சமரசம் குறித்த விழிப்புணர்வை வழங்கி, அனைத்து நீதிபதிகளுடன் சமரசம் குறித்து கலந்துரையாடினார். முன்னதாக, மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் குடும்பநல நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வரவேற்றார். கூட்டத்தில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் மூலம், எளிய முறையில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டன. முடிவில், மாவட்ட சமரச யைத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் நன்றி கூறினார். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்