கிருஷ்ணகிரியில்பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Update: 2023-08-14 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில்நடந்தது.

குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின்சார வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பொதுமக்கள் பங்களிப்பு தொகை

தொடர்ந்து பாகலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாலூர் மெயின் ரோடு முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வரையில் 300 மீட்டர் அளவிற்கு சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்களின் பங்களிப்பு தொகை ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்திற்கான காசோலையை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்