மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிறுமலைக்கோட்டை கிராமத்தில் 8-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.;
தொண்டி,
திருவாடானை தாலுகா, சிறுமலைக்கோட்டை கிராமத்தில் வருகிற 8-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்குகிறார். காலை 10 மணி அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் நேரில் வழங்கி உரிய நிவாரணம் பெறலாம். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தாசில்தார் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.