கிருஷ்ணகிரியில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Update:2023-03-21 00:30 IST

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 342 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, பயிற்சி துணை கலெக்டர் தாட்சாயினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்