மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை தாண்டியது..!

நீர்மட்டம் 119.29 அடியாகவும் ,நீர் இருப்பு 90.92 டிஎம்சியாக உள்ளது.

Update: 2022-07-16 02:56 GMT

சென்னை,

கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.அதன்படி நீர்மட்டம் 119.29 அடியாகவும் ,நீர் இருப்பு 90.92 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கான நீர்வரத்து 1.17 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 1.18 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை 9 மணியளவில் எட்ட வாய்ப்புள்ளது.

மேலும் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியவுடன் உபரி நீர் வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்