சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-12-13 19:01 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சொத்து குவிப்பு வழக்கு

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்தார்.

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த 2012-ம் ஆண்டு தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் தன் மீதான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனவே வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது சம்பந்தமான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

விடுவிப்பு

இந்த வழக்கில் நீதிபதி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய 2 பேரும் விடுவிக்கப்படுகின்றனர் என தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்