சத்தி நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
சத்தி நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு;
சத்தியமங்கலம்
சென்னை தலைமைச்செயலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த பி.செல்வம் சத்தி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சத்தி நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி, மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்